சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டிற்கு வரும் 18-ம் தேதிக்குள் தகுந்த பணியை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006- 2011-ல் திமுக ஆட்சிக்காலத்தில் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் ஜாபர் சேட். முதல்வராக பதவி வகித்த கருணாநிதியிடம் தனி செல்வாக்குடன் திகழ்ந்தவர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாபர்சேட், மண்டபம் முகாமுக்கு கூடுதல் டிஜிபியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக ஜாபர்சேட் வீடு பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011-ல் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜாபர்சேட், அவரது நண்பர்கள், மாமனார் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. பின்னர் ஜாபர்சேட்டை சஸ்பெண்ட் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு 6 மாதத்துக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் ஜாபர் சேட் தொடர்ந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ஜாபர் சேட்டை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க கடந்த 2016 -ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் வி.பார்த்திபன் ஆகியோர், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வரும் ஜன.18-க்குள் ஜாபர் சேட்டிற்கு தகுந்த பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதேபோல் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கிய மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த இடைநீக்க உத்தரவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த இதே அமர்வு, அவருக்கும் உடனடியாக பணி வழங்க உத்தரவிட்டனர்.