உயர் மதிப்பு கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டின் வளர்ச்சியும் வர்த்தகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மம்தா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘ரூபாய் நோட்டு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் விரும்புகிற வரையில் என்னை விமர்சிக்கட்டும். வங்கிகளுக்கு வெளியேயும், ஏ.டி.எம். மையங்களுக்கு வெளியேயும் பணத்துக்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். இது நாட்டுக்கு நல்லது.
ரொக்கமில்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் திட்டம். அதற்காக நீங்கள் என்னை ஆதரிக்க தயார் என்றால் செல்போனில் உங்களுக்கு வசதிகளை வாரி வழங்குவதற்காக வங்கிகள் வரிசையில் நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
மோடியின் இந்த பேச்சுக்கு மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ரூபாய் நோட்டு விவகாரம் தடம் புரண்டு விட்டது என்று பிரதமர் மோடிக்கு தெரியும். எனினும் இது தொடர்பாக விரிவான உரைகளை நிகழ்த்துவதைத் தவிர அவரிடம் வேறு எந்த தீர்வும் இல்லை.
உயர் மதிப்பு கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டின் வளர்ச்சியும் வர்த்தகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. யாருடைய பேச்சையும் பிரதமர் மோடி கேட்பதில்லை.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.