அரசியல் பற்றி கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனிடம் ஆலோசனை பெற்றதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கு கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு கமல்ஹாசனுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயன், அவருக்கு ஓணம் விருந்து வழங்கினார். முதல்–மந்திரியுடனான சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–மந்திரி பினராயி விஜயனுடன் ஓணம் விழாவை கொண்டாடவே திருவனந்தபுரத்துக்கு வந்தேன். நான் ஒவ்வொரு முறையும் கேரளாவுக்கு வருவதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்கிறேன். பினராயி விஜயனுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் இருக்கலாம். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. அவரது கருத்துகள், திட்டங்கள், பணிகள் மக்கள் நலனை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அரசியலில் நான் இப்போது பயிலும் காலத்தில் இருக்கிறேன். அந்த வகையில் அவரிடம் ஆலோசனையும் பெற்றுள்ளேன். தலைவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவர்களுடனான சந்திப்பு நன்மை பயக்கும். அந்த வகையில் பினராயி விஜயனின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வேன். கம்யூனிஸ்டு தலைவர்கள் பலரை நான் கதாநாயகர்களாக பார்க்கிறேன்.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட மறுத்ததை பற்றி நான் என்ன கூற முடியும்? தமிழக அரசியலில் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தால் ஒரு காமெடி படம் போல் உள்ளது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பினராயி விஜயன் மட்டுமல்ல வேறு சில தலைவர்களிடமும் ஆலோசனைகளை பெறுவேன். நான் எந்த கட்சியையும் நோக்கி செல்லவில்லை. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இப்போது நான் ஏதாவது கூறினால் அது சரியாக இருக்காது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
எனது நிறம் காவி அல்ல
கமல்ஹாசனிடம் அவரது அரசியல் சார்புதன்மை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘நான் 40 ஆண்டு காலமாக சினிமா துறையில் இருக்கிறேன். உங்களுக்கு ஒன்றை சொல்வேன். எனது நிறம் காவி அல்ல’’ என பதில் அளித்தார். கமல்ஹாசன் உடனான சந்திப்பு குறித்து கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் தனது முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்ட கருத்து வருமாறு:–
நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு நீண்டகால நட்பு உண்டு. அவர் திருவனந்தபுரம் வரும் போதெல்லாம் என்னை சந்திப்பது வழக்கம். நான் முதல்–மந்திரியான பின்பு அவருடனான முதல் சந்திப்பு இது. நட்பு ரீதியான சந்திப்பானாலும் அரசியல் பேசிக்கொண்டோம். தென்னிந்திய அரசியல், குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.