Approved Admin•••1
TaCyclopedia
TaCyclopedia
12/12/2016, 2:48 am
இந்தியப் பிரதமர்: (ஆங்கிலம்: Prime Minister Of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி ஆவார்.

பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

பிரதமர் நியமனம்:

பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்.

Approved Admin•••2
TaCyclopedia
TaCyclopedia
12/12/2016, 2:54 am
அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

* பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
* பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
*அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
* அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
* பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்.
* பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
* முக்கிய இராணுவ விடயங்கள்.
* பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
* மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
* முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.
* பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
* மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்:

பிரதமர் அலுவலகம்:

அலுவலக முகவரி:

சவுத் பிளக், ராய்சினா ஹில்,
புது டில்லி, இந்தியா - 110 011,
தொலைபேசி: 91-11-23012312.

இந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது.

Approved Admin•••3
TaCyclopedia
TaCyclopedia
12/12/2016, 2:55 am
பிரதமரின் தேசிய நிதிகள்:

பிரதமரின் தேசிய நிவாரண நிதி

1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பிரதமரின் தேசிய இராணுவ நிதி:

இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.

இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Approved Admin•••4
TaCyclopedia
TaCyclopedia
12/12/2016, 2:59 am
பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்:

* இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, ஐ. கே. குஜரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.

* இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.
* இந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.

ஜவஹர்லால் நேரு:
இந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள்.

குல்சாரிலால் நந்தா:
இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.

லால் பகதூர் சாஸ்திரி:
இவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.

இந்திரா காந்தி:
முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.

மொரார்ஜி தேசாய்:
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.

ராஜீவ் காந்தி:
41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவர் ஆவார்.

பி. வி. நரசிம்ம ராவ்:
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.

அடல் பிஹாரி வாஜ்பாய்:
இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.

மன்மோகன் சிங்:
இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ஆவார்.

Approved Admin•••5
TaCyclopedia
TaCyclopedia
12/12/2016, 3:24 am
இந்தியப் பிரதமர்களின் பட்டியல்:

1. ஜவஹர்லால் நேரு - ஆகஸ்ட் 15, 1947 to மே 27, 1964 - இந்திய தேசிய காங்கிரஸ் - அலகாபாத், உத்தரப் பிரதேசம்

2. குல்சாரிலால் நந்தா - மே 27, 1964 to ஜூன் 9, 1964 - இந்திய தேசிய காங்கிரஸ் - சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)

3. லால் பகதூர் சாஸ்திரி - ஜூன் 9, 1964 to ஜனவரி 11, 1966 - இந்திய தேசிய காங்கிரஸ் - முகல்சாரி, உத்தரப் பிரதேசம்.

4. குல்சாரிலால் நந்தா - ஜனவரி 11, 1966 to ஜனவரி 24, 1966 - இந்திய தேசிய காங்கிரஸ் - சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)

5. இந்திரா காந்தி - ஜனவரி 24, 1966 to மார்ச் 24, 1977 - காங்கிரஸ் - அலகாபாத், உத்தரப் பிரதேசம்

6. மொரார்ஜி தேசாய் - மார்ச் 24, 1977 to ஜூலை 15, 1979 - ஜனதா கட்சி - பாதிலி, மும்பை

7. சரண் சிங் - ஜூலை 28, 1979 to ஜனவரி 14, 1980 - ஜனதா கட்சி - நூர்பூர், உத்தரப் பிரதேசம்.

8. இந்திரா காந்தி - ஜனவரி 14, 1980 to அக்டோபர் 31, 1984 - காங்கிரஸ் - அலகாபாத், உத்தரப் பிரதேசம்.

9. ராஜீவ் காந்தி - அக்டோபர் 31, 1984 to டிசம்பர் 2, 1989 - காங்கிரஸ் - மும்பை

10. வி. பி. சிங் - டிசம்பர் 2, 1989 to நவம்பர் 10, 1990 - ஜனதா தளம் அலகாபாத், உத்தரப் பிரதேசம்.

11. சந்திரசேகர் - நவம்பர் 10, 1990 to ஜூன் 21, 1991 - ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்.

12. பி. வி. நரசிம்ம ராவ் - ஜூன் 21, 1991 to மே 16, 1996 - காங்கிரஸ் - கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம்.

13. அடல் பிஹாரி வாஜ்பாய் - மே 16, 1996 to ஜூன் 1, 1996 - பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்.

14. தேவகவுடா - ஜூன் 1, 1996 to ஏப்ரல் 21, 1997 - ஜனதா தளம் - ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்.

15. ஐ. கே. குஜரால் - ஏப்ரல் 21, 1997 to மார்ச் 19, 1998 - ஜனதா தளம் - ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)

16. அடல் பிஹாரி வாஜ்பாய் - மார்ச் 19, 1998 to மே 22, 2004 - பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்.

17. மன்மோகன் சிங் - மே 22, 2004 to மே 21, 2009 - இந்திய தேசிய காங்கிரஸ் - கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)

18. மன்மோகன் சிங் - மே 22, 2009 to மே 26, 2014 - இந்திய தேசிய காங்கிரஸ் - கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)

19. நரேந்திர மோதி - மே 26, 2014 to Current - பாரதிய ஜனதா கட்சி - வத்நகர், குசராத்து.

•••6
Sponsored content

CREATE NEW TOPIC



Information

இந்தியப் பிரதமர்

From  » தமிழ் தகவல் களஞ்சியம் » வரலாறு

Topic ID: 154

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...