NewMember•••1
அட்டமாதிபதி
அட்டமாதிபதி
6/1/2022, 2:21 pm
அங்காரக தோஷம் என்றால் "செவ்வாய் தோஷம்" என்று பொருள். செவ்வாய் தோஷம் என்றால் ஆண், பெண் ஜாதகங்களில் ஜென்ம லக்கனத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகம் "செவ்வாய் தோஷ"ஜாதகம் எனப்படும்.

விதி விலக்கு:
1. புதனின் ஆட்சி ராசிகளான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் செவ்வாய் இருக்கப்பெற்று, ஜென்ம இலக்கினத்திற்கு இரண்டாமிடமாக மிதுனம், கன்னி ராசிகள் அமைந்தால் தோஷமில்லை.

2. செவ்வாய் தன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம் ராசிகளில் இருக்கப்பெற்று, ஜென்ம இலக்கினத்திற்கு நான்காமிடமாக மேஷம், விருச்சிகம் அமைந்தால் தோஷமில்லை.

3. செவ்வாய்க்கு உச்ச வீடான மகர ராசியிலோ, செவ்வாய்க்கு நீச்ச வீடான கடக ராசியிலோ செவ்வாய் இருக்கப் பெற்று, ஜென்ம லக்கனத்திற்கு ஏழாமிடமாக மகர, கடக ராசிகள் அமைந்தால் தோஷமில்லை.

4. குருவுக்கு ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ராசிகளில் செவ்வாய் இருக்கப் பெற்று, ஜென்ம இலக்கினத்திற்கு எட்டாமிடமாகத் தனுசு, மீனம் அமைந்தால் தோஷமில்லை.

5. சுக்கிரன் ஆட்சி ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் செவ்வாய் இருக்கப் பெற்று, ஜென்ம இலக்கினத்திற்கு 12-ஆம் இடமாக ரிஷபம், துலாம் அமைந்தால் தோஷமில்லை.

6. சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றாலும், சனிக்கு ஆட்சி ராசியான கும்பத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றாலும் தோசமில்லை.

7. செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும், குருவுடன் சேர்ந்திருந்தாலும், செவ்வாய் தோஷமில்லை.

8. செவ்வாய் குருவால் பார்க்கப்பட்டாலும், செவ்வாய் தோஷமில்லை.

பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின், அதே அளவு தோஷமுள்ள ஜாதகருக்கு மணம் செய்விக்க வேண்டும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, மேலே கண்டபடி விலக்குப் பெற்றிருப்பின், அதேபோன்று, தோஷ விலக்குப் பெற்ற ஜாதகருக்கு மணம் முடிக்க வேண்டும். இவ்வாறு சமதோஷம் பெற்றவர்கள் இணைந்தால் சகல விதத்திலும் நன்மை கிட்டும்.

பெண் ஜாதகருக்குச் செவ்வாய் தோஷமிருந்து, தோஷமில்லாத ஆண் ஜாதகருடன் இணைந்தாலும், ஆண் ஜாதகருக்குச் செவ்வாய் தோஷமிருந்து, தோஷம் இல்லாத பெண்ணை ஜாதகர் மணந்தாலும், தோஷம் உள்ளவர்களோடு இணைந்த தோஷம் இல்லாதவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள், கண்டங்கள் ஏற்படும்.

செவ்வாய் தோஷத்தை இலக்கினத்திலிருந்து பார்ப்பதோடு, சந்திரனிலிருந்தும், சுக்கிரனிலிருந்தும் 2,4,7,8,12-ஆம் இடங்களில் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய் தோஷம் எனக் கூறுவோர் உளர். மேலும் இலக்கினத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், நடைமுறையில் இலக்கினத்தில் இருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பது மட்டுமே செவ்வாய் தோஷம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தைக் கூறிய பதினெட்டு ரிஷிகளில் ஒருவரான அத்திரி மகரிஷி கூறியது போல், செவ்வாய் தோஷமுள்ள ஜாதகருக்குச் செவ்வாய் தோஷமில்லாத ஜாதகரை இணைக்கக் கூடாது.

CREATE NEW TOPIC



Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...