ஹைதராபாத் : தெலுங்கானாவின் ஹைரதராபாத்தில் உளள முத்தூட் நிறுவனத்தில் இருந்து 40 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அந்த நகைகள் அடகு வைக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது.
நகைகளை அடகு பெற்று கடன் வழங்கும் முத்துட் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 5000 கிளைகள் உள்ளன.
இதில் 85 சதவீத நிறுவனங்கள் கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளன. இந்நிலையில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் முத்தூட் நிறுவன கிளையில் இருந்து 40 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
அந்த நகைகள் அனைத்தும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நகைகள் கொள்ளை போன செய்தி தீ போல பரவியதால் அந்த நிறுவனத்தின் முன்பு ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.