சென்னை: வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதியன்று சென்னையில் கரையைக் கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. 10 நாட்களுக்கும் மேலாக சென்னை மக்கள் தவித்து போயினர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ரூ. 22,500 கோடி ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று பிரதமரை சந்தித்த முதல்வர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மத்தியக் குழு இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையில் 9 பேர் அடங்கிய மத்தியக் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது. இன்று காலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.
மத்திய குழுவினர் தாமதமாக சென்னை வந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எவ்வளவு நாட்கள் கழித்து மத்திய குழுவினர் வருவது என்று கேள்வி எழுப்பினார். அனைவரும் புகைப்படத்தை மட்டுமே பார்க்க வருகிறார்களா? சாய்ந்த மரங்களை அகற்றிய பின்னர் வந்து என்ன பயன் என்றும் வைகோ கேட்டார்.
மோடியை நேரில் சந்தித்த போது, பேரிடர் என்றால் உடனே உதவி செய்வேன் என்று கூறினார். அவர் செய்வார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் வைகோ தெரிவித்தார்.
இதேபோல செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், புயலில் சாய்ந்த மரங்களை எல்லாம் அகற்றிய பின்னர் மத்திய குழுவினர் வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கேட்ட ரூ. 22.500 கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.