சென்னை: அதிமுகவின் பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவி யாருக்கு என முடிவு செய்யப்பட உள்ளது.
சசிகலாதான் பொதுச்செயலராக வேண்டும் என மன்னார்குடி கோஷ்டி மல்லுக்கட்டுகிறது. மத்திய அரசோ இதை விரும்பவில்லை. சசிகலாவும் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பால் தயங்குகிறார். இந்த நிலையில் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த சில தலைவர்கள் போயஸ் கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இச்சந்திப்புகளின் போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது; மத்திய அரசும் நெருக்கடி தருகிறது; ஆகையால் உடனே நீங்கள் பொதுச்செயலர் பதவியை ஏற்க வேண்டாமே; உரிய காலம் வரும்போது ஏற்கலாம் என அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
ஆகையால் பொதுக்குழுவில் தற்காலிக ஏற்பாடாக வேறு ஒருவரை பொதுச்செயலராக்குவோம் அல்லது நீங்கள்தான் பொதுச்செயலராக வேண்டும் என ஒரு தீர்மானம் மட்டும் போடுவோம் எனவும் யோசனையை முன்வைத்தாராம். சசிகலாவுக்கு மிக நெருக்கமான சீனியர் அமைச்சர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.