சென்னை: வருமான வரி சோதனை தொடர்பாக தேவையற்ற பிரச்சனைகளை முன்னாள் தலைமை செயலார் ராமமோகன் ராவ் எழுப்புவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வருமான வரித்துறை ஆய்வுக்குள்ளான தமிழக தலைமைச் செயலாளர்க இருந்த ராம மோகன் ராவ் நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ராம மோகன் ராவ் தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்புவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தன் மீது தவறு இல்லை என்றால் அதனை ராமமோகன் ராவ் சட்டப்படி நிரூபிக்கலாம் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் மத்திய அரசுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தாம் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாக ராமமோகனராவ் கூறியது பற்றிய கேள்விக்கு, அதுகுறித்து தமிழக அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.