சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் பங்களாவில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டில் 500 போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மறைந்த பின்னரும் சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் 240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து கணிசமான எண்ணிக்கையில் போலீசார் போயஸ் கார்டன் பங்களா பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். அங்கு தனியார் நிறுவன பணியாளர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவற்றில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் உளவுத்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மொத்தம் 150 பேர் பணியில் தொடர்கின்றனர். இதேபோல் சிறுதாவூர் பங்களாவில் 250 போலீசார் பணியில் உள்ளனர். இந்த பாதுகாப்பையும் விலக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.