சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நாளை கூட உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பங்கேற்க மாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமான பின்னர், அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு முதன் முறையாக நாளை கூட உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவிற்கு கொடுக்க முன்னணித் தலைவர்களும், நிர்வாகிகளும் தயாராக உள்ள நிலையில், சசிகலாவிற்கு அந்தப் பதவியை வழங்க பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நாளை கூட உள்ள பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா பங்கேற்கும்போது, அவரை எதிர்ப்பவர்கள் யாராவது எதிர்த்துக் குரல் கொடுத்து கண்டனம் தெரிவிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சசிகலா பொதுக் குழுவில் பங்கேற்க மாட்டார் என்றும் பொதுக் குழுவில் சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று தீர்மானம் போட்ட பிறகு அந்தத் தீர்மானத்தின் நகலை சசிகலாவிடம் தரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு சசிகலா செல்வார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும், அதிமுகவினர் அனைவரையும் தனியார் சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அப்படியே சொகுசு பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு பொதுக் குழுக் கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் போடப்போகும் நேரத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.