சென்னை: அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரையும் அதிமுக தொண்டர்கள் தாக்கினார்கள். இது சரியானதுதான் என்றும் சதிகாரியான சசிகலா புஷ்பாவின் உறவினர்களை இதைவிட மென்மையாக தாக்க முடியாது என்றும் ஆவடி குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
நாளை அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட உள்ள நிலையில், இன்று திடீரென அதிமுக தலைமையகத்தில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், அவரது வழக்கறிஞருக்கும் சரியான உதை விழுந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆவடிக் குமார் கூறியதாவது:
சசிகலா புஷ்பா ஆதரவாளர்களிடம் இதைவிட எப்படி மென்மையாக நடந்து கொள்ள முடியும்? அதிமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் எந்தத் தலைவர்களும் இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் எப்படி இதனை தாங்கிக் கொள்வார்கள். முழுக்க முழுக்க கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள் சசிகலா புஷ்பா. இதுமட்டுமல்ல; திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர். இதை எல்லாம் தாண்டி ஜெயலலிதாவை பற்றி ராஜ்ய சபாவில் மிகவும் கீழ்த் தரமாக பேசியவர். இப்படிப்பட்ட ஒரு சதிகாரியை எப்படி அணுக வேண்டும் என்று அதிமுகவினருக்கு தெரியும்.
அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு சசிகலா புஷ்பா யார்? அவரது ஆதரவாளரையோ அல்லது உறவினரையோ எப்படி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க முடியும். சசிகலாவின் கணவர் யார்? யார் அவருக்கு கணவர்? அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு இருக்கிறது. அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் இங்கு வர வேண்டும் என்று ஆவடி குமார் கூறினார்.