சென்னை: எனது பண்ணை வீட்டை மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் சசிகலா குடும்பத்தினர் என குற்றம் சாட்டியுள்ளார் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன்.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான கங்கை அமரினின் பண்ணை வீட்டை, சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மிரட்டி வாங்கியது குறித்து ஏற்கெனவே பல செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சசிகலா மீதான குற்றப்பத்திரிகையிலும் கங்கை அமரனிடமிருந்து அபகரித்த சொத்துகள் இடம்பெற்றுள்ளன. இப்போது ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மீண்டும் இந்த பிரச்சினை கிளம்பியுள்ளது. அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு இந்தப் பிரச்சினையைக் கிளறியுள்ளது. கங்கை அமரனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை எப்படி மிரட்டி வாங்கினார்கள்? என்பது குறித்த வீடியோவை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த நிலத்தை வெறும் ரூ 13 லட்சத்துக்கு மிரட்டி வாங்கியதை அறப்போர் இயக்கம் வீடியோவாக அம்பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கங்கை அமரன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தன்னை சசிகலாவின் ஆட்கள் போயஸ் கார்டனுக்கு அழைத்துப் போய் ஜெயலலிதாவிடம் காட்டிவிட்டு, பின்னர் மிரட்டி அந்த நிலத்தை வாங்கிக் கொண்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.