சென்னை: "அன்னை வடிவிலே உன்னை பார்க்கிறோம்.. தலைமை ஏற்கவே தாயை அழைக்கிறோம்" என்று சசிகலாவை பொறுப்பேற்க வருமாறு கேட்கும் பாடல் ஒன்று சசிகலா ஆதரவாளர்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கேட்பதற்கு ஒரு ஜபக் கூட்ட பாடல் போல உள்ள இந்த பாடல், நாளை பொதுக் குழு கூட உள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் "சின்னம்மா" சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பிற்கு பின்னர் அடித்தள தொண்டர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மற்றொரு பிரிவினர் அதிமுகவிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை பொதுச் செயலாளராக ஆக்க வேண்டும் என்று போர்க் கொடித் தூக்கினர்.
எது எப்படியோ நாளை கூட உள்ள பொதுக் குழுவில் வி.கே. சசிகலாவிற்கு பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதற்கான தீர்மானங்கள் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்ட நிலையில், சசிகலாவை தலைமைப் பொறுப்பேற்க வருமாறு பாடல் ஒன்றை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஜபக் கூட்ட பாடல் போல் தொடங்கும் இந்தப் பாடலின் தொடக்க வரியே "அன்னை வடிவிலே உன்னை பார்க்கிறோம்.. தலைமை ஏற்கவே தாயை அழைக்கிறோம்" என்று சசிகலாவை குளிர வைத்துள்ளது. இதுக்கு பிறகு என்ன? தியாகத்தின் சின்னமே, நியாயத்தின் உருவமே என பாடல் முழுக்க ஒரே அக்கப்போர்தான்.
தஞ்சை மன்னார்குடியைச் சேர்ந்தவர் சசிகலா என்பதால் "காவிரி வெள்ளம் கரைகளைத் தாண்டி பாய்வது போல பரவசத்தோடு பொன்மனச் செல்வியின் மறு உருவாகி புன்னையோடு இருவிரல் காட்டி சின்னம்மா வருகவே" இப்படி ஐஸ் கட்டிய தூக்கி சசிகலா தலையில் மொத்தமாக வைத்தால் நாளைக்கு பொதுக் குழுவிற்கு வர முடியாத அளவிற்கு ஜலஷோம் பிடிச்சிக்க போகுது.
"பல கோடி தொண்டரை வழி நடத்த.. வழியில் தோன்றிடும் தடை உடைக்க.. தமிழ் நாட்டு மக்களின் துயர் துடைக்க.. சின்னம்மா வருகவே" இப்படியாக புகழ்ந்து தள்ளி முடிவடைகிறது இந்தப் பாடல்.
இந்தப் பாட்டை கேட்டு முடித்ததும், ஆசிர்வாதம் சேனலில் பாட்டு கேட்டது போன்ற உணர்வு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.