சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல, அவரை திட்டமிட்டு படுகொலை செய்து விட்டனர் என்று கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்று அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
சசிகலா நடராஜனின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இன்று காலையில் கட்சியில் இருந்து விலகிய ஆனந்தராஜ், கட்சிச் தலைமைக்கு சசிகலா ஏற்றவர் அல்ல என்று கூறினார். இந்த நிலையில் கராத்தே வீரர் ஹூசைனி சசிகலா மீதும் நடராஜன் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல என்று கூறினார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை ரத்தத்தினால் வரைந்து அவரிடம் கொடுத்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக 40 பக்க கடிதம் எழுதி கொடுத்திருந்ததாகவும் ஹூசைனி கூறினார்.
ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இதில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் பதவி அளித்துள்ளார் ஜெயலலிதா. தயவு செய்து மன்னார்குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விட வேண்டாம். இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
முள்ளிவாய்க்கால் பிரச்சினை வந்த போது சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றி வாக்குமூலம் கொடுத்தேன். அப்போதே நான் கடிதம் எழுதினேன். 40 பக்க கடிதம் கொடுத்தேன். எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்தனர் என்றும் கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
முதன் முறையாக மன்னார்குடி குடும்பத்தைப் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் ஹூசைனி.