சென்னை: எனது கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகார் கடிதத்தில், நானும் என் கணவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளோம். நான் ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளேன். இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்வதற்காக சென்ற என் கணவரை (லிங்கேஸ்வர திலகம்) ரத்த வெள்ளத்தில் காவல்துறையினர் அழைத்து சென்றதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.
நான் உடனடியாக என் வழக்கறிஞர் உதவியுடன் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது எவருக்கும் இது குறித்து தெரியவில்லை என்று கூறிவிட்டனர். ஆனால் கடைசியாக காவல்துறையினர் தான் அழைத்து சென்றார்கள். அதனால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு என் கணவர் பற்றிய தகவலை உடனே தெரிவிக்கும் படியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு மாநில காவல்துறை தலைவர், சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் ராயப்பேட்டை காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு சசிகலா புஷ்பா அனுப்பியுள்ளார்.