சென்னை: அதிமுக, பாஜக இடையே நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உடன்பாடும் இல்லை என பாஜக எம்.பி.,இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வு குறித்து நான் எனது கருத்தை ஒருமுறைக்கு பலமுறை தெளிவாக சொல்லிருக்கிறேன். அதிமுக பொது செயலாளராக யார்வர வேண்டும், யார் வருவார்கள் என்பது போன்ற செய்திகள்.. இதுபற்றிய கருத்துகள் குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. காரணம் அது அவர்களுடைய உட்கட்சி விஷயம்.
அதுபோலவே முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சி குறித்து எந்த கருத்தும் உடனடியாக சொல்ல விரும்பியதில்லை. காரணம் சிறிது காலமாவது அவகாசம் தரவேண்டும். என்பது என் கருத்து. ஆட்சி, கட்சி உடன் எங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உடன்பாடும் எங்களுக்கு இல்லை. அவர்கள் நல்லது செய்தால் பாராட்டுவோம் அல்லது செய்தால் விமர்சனம் செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.