சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்ட வரவேற்பு பதாகைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சசிகலாவை வாழ்த்தும் பதாகைகளை எங்காவது சில இடங்களில்தான் பார்க்க முடிந்தது.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதன்பிறகு முதல் முறையாக, அக்கட்சி செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது.
அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் யாராவது கோஷமிட்டால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு கூட்டம் நடைபெறும் இடத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுக்குழு கூட்ட போஸ்டர், பேனர் எதிலுமே ஜெயலலிதா தவிர்த்து வேறு யாருடைய போட்டோக்களும் இடம்பெறவில்லை. சசிகலாவை வாழ்த்தியோ, வரவேற்றோ கூட போஸ்டர்களை நிறைய பார்க்க முடியவில்லை. அவை சில இடங்களில் மட்டுமே தென்பட்டன. ஜெயலலிதா உயிரோடு இருந்து பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்தால் எப்படிப்பட்ட போஸ்டர்கள், பேனர்கள் இருக்குமோ அப்படித்தான் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்ட உறுப்பினர்கள், சென்னைக்கு வந்த சொகுசு பஸ்களின் முன்புறமும் ஜெயலலிதா போட்டோவுடானான, பேனர்களே கட்டப்பட்டிருந்தன.
ஏற்கனவே திட்டமிட்டு நடப்பதை போன்ற ஒரு அசாதாரண ஒழுங்கு இவற்றில் தென்படுகிறது.