சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது தோழி சசிகலாவை தலைமை ஏற்க அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுகவைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்து காலமான ஜெயலலிதாவின் பொறுப்பை சசிகலாவிற்கு அதிமுக பொதுக் குழு அளித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்று மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
பொதுக் குழுவில் சசிகலாவிற்கு தலைமைப் பொறுப்பை அளித்து தீர்மானம் நிறைவேற்றிய உடன் அதிமுக ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தின் வாசலில் காத்துக் கிடந்த அதிமுக தொண்டர்கள் ஆராவாரம் தெரிவத்தனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, சசிகலாதான் "காவல் தெய்வம்" என்றும் அவர்தான் அதிமுகவை காக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.
சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ள விரும்பாத அதிருப்தியாளர்களிடம், சசிகலாவை ஏற்றுக் கொள்ளுமாறு பேசுவோம் என்றும் சசிகலாதான் ஜெயலலிதாவின் மறுவடிவம் என்றும் அதிமுகவின் பெண் தொண்டர்கள் ஆவேசமாக கூறினார்கள். மேலும், அங்கு பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சித் தெரிவித்தனர்.
இதனிடையே, சசிகலா பொதுச் செயலாளர் என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, அதிமுக தொண்டர்கள் ஆராவாரம் செய்தனர்.