சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. முதலில் ஜெயலலிதா மறைவுக்கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் முக்கியமானது. சின்னம்மா வி.கே.சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும் என அந்த தீர்மானம் சொல்கிறது. ஆனால் பொதுச் செயலாளராக அவரை நியமிக்க தீர்மானத்தில் அம்சம் இடம்பெறவில்லை.
5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுகவில் உறுப்பினராக இருந்தால்தான், அவர் பொதுச் செயலாளராக முடியும் என்பது விதிமுறை. எனவே சட்ட விதிகளை திருத்தும்வரை சசிகலா தலைமையிலேயே அதிமுக இயங்கும் என்று மட்டும் குறிப்பிட பொதுக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.