அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் புதிய பேனரை அவரது ஆதரவாளர்கள் வைத்தனர
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா மட்டும் இருந்த பேனர் உடனடியாக மாற்றப்பட்டு, சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பது போன்ற படத்துடன் புதிய பேனரை சசிகலாவின் ஆதரவாளர்கள் வைத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையின் கீழ் அதிமுகவினர் கட்சிப் பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடன் மண்டபத்துக்கு வெளியே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய பேனர்கள் வைக்கப்பட்டன. சசிகலாவுக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
மேலும் ஜெயலலிதாவின் ஒரே அரசியல் வாரிசு, தியாகத் தலைவி உள்ளிட்ட வாசகங்களும் அந்த பேனரில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜெயலலிதா மட்டும் தனியாக இருந்த பேனர் அகற்றப்பட்டது.