சென்னை: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக கடந்த 27 ஆண்டுகளாக ஜெயலலிதா இருந்து வந்தார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று டிசம்பர் 5ம் தேதி வரை கூறி வந்தவர்கள் இன்றைக்கு சசிகலாவை பொதுச்செயலாளராக பதவியேற்க அழைத்தனர்.
அம்மாவின் மீதுள்ள அன்பினால் அப்படி அழைத்தோம் என்றார் பொன்னையன். ஜெயலலிதாவை வைத்து பார்த்த இடத்தில் சசிகலா? அதெல்லாம் செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள். அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செய லாளர் பதவியைத் ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார். பிறகு, மூத்த அமைச்சரும் எம்ஜிஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார்.
அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார் எம்ஜிஆர். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்தது.
எம்ஜிஆர் - ஜெயலலிதா:
எம்.ஜி.ஆர் தனது மறைவுக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். எம்ஜிஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்தது. ஆனால் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக வந்த பின்னர் கட்சித் தலைமையும் ஆட்சி அதிகாரமும் ஜெயலலிதா வசமே இருந்தது.
அமாவாசையில் பொதுக்குழு:
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று இரவே சென்னையில் தஞ்சம் அடைந்தார்கள். அமாவாசை மதியம் வரையில்தான் உள்ளது. நல்ல நேரம் 10.45 முதல், 11.45 வரை உள்ளது. அதாவது அறுபது நிமிடம்தான் நல்ல நேரம். அதற்குள் பொதுக்குழுவை முடிக்க நினைக்கிறார் மதுசூதனன். எனவேதான் நேற்று இரவே அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து சொகுசு ஓட்டல்களில் தங்க வைத்தனர்.
சொகுசு பேருந்துகளில் பயணம்:
பொதுக்குழு உறுப்பினர்கள் காலை 7.30 மணிக்கே பொதுக்குழு மண்டபத்திற்கு ஆம்னி பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டார்கள். அதே பேருந்தில்தான் மாவட்டச் செயலாளர்களும் சென்றார்கள். அதற்கு முன்பாக மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம்:
ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பொதுக்குழுவில் யாரும் பேசவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ஓ.பன்னீர் செல்வம் கண்ணீருடன் வாசிக்க, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணீர் விட்டனர்.
சசிகலாவிற்கு தீர்மானம்:
பொதுக்குழுவை நேரடி ஒளிபரப்பு செய்தனர். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்து கட்சிக்கு தலைமையேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் நகலை முதல்வர் ஓபிஎஸ் உடன் அனைவரும் போயஸ் கார்டனுக்கு எடுத்துசென்று சசிகலாவிடம் கொடுத்து, கட்சியை வழி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதிய பொதுச்செயலாளர்:
எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவினால் 30 ஆண்டு காலமாக கட்டி காக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் இல்லாமலேயே இன்று கூடியது.
அக்கட்சியின் புதிய பொதுச்செயலாளரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா.
வியாழக்கிழமையன்று ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தனர்.