சென்னை: அதிமுக பொதுச் செயலளாராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது புகைப்படத்தை சட்டைப்பாக்கெட்டில் வைத்து சசியின் ஆதரவாளர்கள் வலம் வர தொடங்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நடைபெற்ற முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இதில் சசிகலாவை அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நியமித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்குப் பின் போயஸ் கார்டனில் திரண்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரது புகைப்படத்தை சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்து வலம் வந்தனர். அதில் சசிகலாவின் புகைப்படம் முதலாவதாகவும் பெரியதாகவும் இடம் பெற்றிருந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சசியின் போட்டோவுக்குப் பின்னால் சிறியதாக அச்சிடப்பட்டிருந்தத. அந்தப் புகைப்படத்தைக் காட்டி சசியின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.