சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகலை சசிகலா ஜெயலலிதாவின் சென்டிமென்ட் கலரான பச்சைப் புடவையில் வந்து பெற்றுக்கொண்டார்.
சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மான நகலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுறை உள்ளிட்டோர் சசிகலாவிடம் வழங்கினர். அப்போது ஜெயலலிதாவைப் போல பச்சை கலர் சென்டிமென்டை பின்பற்றிய சசி 'பச்சைப் புடவையில்' தீர்மான நகலை பெற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது முக்கிய நிகழ்ச்சிகள், கூட்டங்களின் போது பச்சை நிற சேலையை உடுத்தியிருந்தார். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் போதும் அவர் பச்சை நிற பேனாக்களையே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.