சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலளார் பதவி காலியாக இருந்தது. இந்த பொறுப்பை ஏற்குமாறு கட்சி நிர்வாகிகள் சிலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற எம்பி சசிகலா புஷ்பா, ஜெயலலிதா இறப்புக்கு சசிகலாதான் காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அதிமுக அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
இதற்காக நேற்று அதிமுக கட்சி அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வக்கீல் சசிகலா புஷ்பா சார்பில் மனுத்தாக்கல் செய்ய வந்தனர். அவர்களை சசிகலா தரப்பு சரமாரியாக தாக்கியது.
இந்நிலையில் இன்று சசிகலா போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டனர்.