NewMember•••1
Bharathi
Bharathi
30/12/2016, 12:38 pm
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

டாக்டர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் அமைந்திட வேண்டும். அத்தகைய வெற்றிச் செய்திக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று மருத்துவமனையில் இருந்தவாறு தன் உள்ளத்தின் ஆவலை வெளிப்படுத்தி, புரட்சித்தலைவி அம்மா அறிக்கை வாயிலாக வாக்காளப் பெருமக்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று, அவருடைய ஆட்சியின் சிறப்புக்கு தருகின்ற அங்கீகாரமாக, தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வெற்றியை ஜெயலலிதாவிற்கு வழங்கி, அவர் தன் வாழ்வின் நிறைவு நேரத்தில் கூட வெற்றித் திருமகளாய் விடை பெற்றார் என்ற சரித்திரப் பதிவை கழகத்திற்கு அளித்திருக்கும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் வாக்காளப் பெருமக்களுக்கு அம்மாவின் ஆவலை நிறைவேற்றிய அன்பு வாக்காளர்களே நன்றி என்று இந்த பொதுக்குழு மனதார நன்றி கூறுகிறது.

விவசாயி ஜெயலலிதா:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதைச் செய்தாலும் அதை வெற்றிகரமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் செய்து முடித்திடத் தேவையான அறிவும், ஆற்றலும், உழைப்பும் உடையவராய்த் திகழ்ந்தார். தான் கால் பதித்த துறைகள் ஒவ்வொன்றிலும் தலைமை இடத்திற்கு அவர் சென்ற போதும், தன்னை ஒரு விவசாயி என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். தன்னுடைய தொழில் என்று குறிப்பிட வேண்டிய தருணங்களில் அனைத்து ஆவணங்களிலும், தான் ஒரு விவசாயி என்றே குறிப்பிட்டார்.

உழவர்கள் பாதுகாப்பு திட்டம்
2009ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்து ஜெயலலிதா ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. விவசாயம் தழைக்கும் போது தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பதில் உறுதியான பார்வை கொண்டிருந்த ஜெயலலிதா றப்பு முதல் இறப்பு வரை விவசாயிகளுக்கு பயன்படும் "உழவர் பாதுகாப்புத் திட்டம்" உள்ளிட்ட எண் ணற்ற திட்டங்களை விவ சாயிகளுக்காக தனது ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றினார்.

தேசிய விவசாயிகள் தினம்:

இத்தனை அக்கறையோடு விவசாயிகளுக்காக அரும் பாடுபட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை ‘தேசிய விவசாயிகள் தினம்‘ என்று அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பின் முக்கியத்துவத்தை நாடு உணர்ந்து கொள்ளும் வகையில் இந்திய நாடாளு மன்றத்தில் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ வெண்கல சிலை நிறுவப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தேசப்பற்று:

இந்திய திருநாட்டை தன் உயிராக நேசித்தவர் ஜெயலலிதா. 1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது நம் படை வீரர்களோடு ஒன்றுபட்டு நிற்க வேண் டும் என்பதற்காக ஜெயலலிதா தன் தாயாரோடு தேசத்தின் எல்லைக்கு ஓடோடிச் சென்று, தான் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் யுத்த நிதிக்காக அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் மகிழ்ச்சியோடு வழங்கியவர்.

பாரத ரத்னா விருது:

பெண் கல்வியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா தரமான கல்வியை அனைத்து பெண்களுக்கும் வழங்குவதில் ஒரு சமூக நீதிப் போராளியாகத் திகழ்ந்து வெற்றி கண்டவர். தன்னுடைய வாழ்வில் உழைப்பாலும், அறிவாலும், மதிநுட்பத்தாலும், தான் படைத்த சாதனைகளை இந்தியப் பெண்கள் அனைவருக்கும் உரியதாக அர்ப்பணித்த ஜெயலலிதா இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய முன்னோடி யாகவும், தனக்கான வாழ்வி யல் எடுத்துக் காட்டாகவும் எண்ணி மகிழ்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, மலை மேல் ஏற்றப்பட்ட தீபம். இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்சித்தலைவி அம்மா இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத் ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.
ஜெயலலிதா திட்டங்கள்

பசி, பஞ்சம், பட்டினி இல்லாத நிலையிலான தன்னுடைய ஒரு கையெழுத் தினால் நிலை நாட்டியவர் ‘மனிதப் புனிதர்' ஜெயலலிதா.
உலக நாடுகள் எங்கும் தேடிச் சென்று பார்த்தாலும் இத்தகைய புரட்சிகர திட்டம் எங்கும் இல்லை என்று கூறும் வண்ணம் ஜெயலலிதா அறிமுகம் செய்த பசிப் பிணி போக்கும் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

அம்மா உணவகங்கள்:

விலையில்லா அரிசி- ஒரு முறை அல்ல, ஆண்டுகள் தோறும். விலையில்லா அரிசி- ஒரு சிலருக்கு அல்ல, எல்லோருக்கும்.
விலையில்லா அரிசி- ஓரிரு இடங்களில் மட்டும் அல்ல, மாநிலம் முழுவதும்.இந்த மகத்தான சாதனையை மிகச் சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்த முதல்-அமைச்சர் அம்மாவைத் தவிர வேறு யாரால் எண்ணிப் பார்த் திருக்க முடியும்?நகர்ப்புற பசியையும், பட்டினியையும் ஒழிக்க ‘அம்மா உணவகங்கள்'.எதிர்கால சந்ததியினர் உடல் பலமும், அறிவின் வளமும் கொண்டவர்களாய் வளர சத்தான உணவு வகைகள்.

நோபல் பரிசு:

கருவுற்ற தாய்மார்களுக்கு பேருகால சோகை நீக்க சிறப்பு உதவிகள் என்று உணவை உயிருக்கு நிகராக அடிப்படை உரிமையாக்கி, தமிழகத்தில் நாள்தோறும் இத்தகைய திட்டங்கள் எல்லோரையும் சென்றடை யும் வகையில் செய்து காட்டி, நீடித்த அமைதிக்கு வழி வகுத்திருக்கும் அன்னையாம் நம் ஜெயலலிதாவிற்கு ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்பினைப் பெற்ற பிலிப்பின்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருதும், ஜெயலிதா பஞ்சம் நீக்கி, பட்டினி தீர்த்து எல்லோருக்கும் உணவளித்த மேன்மைக்காக நோபல் அமைதிப் பரிசும் வழங்கப்படத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா:

டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டினை மக்களுக்குத் தொண்டாற்றும் ஆண்டாக கழக உடன்பிறப்புகள் ஒவ் வொருவரும் கடைப்பிடிப்பது, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆருக்கும், இதய தெய்வம் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் கழ கத்தினர் செய்கின்ற நன்றி காணிக்கையாக அமைந் திடும். அத்தகைய செயலே ஜெயலலிதாவிற்கு நாம் செய்கின்ற நிறைவான அஞ்சலியும், அவரது ஆன்ம சாந்திக்கான பிரார்த்தனையு மாக அமைந்திடும். எனவே, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை மக்கள் பணி ஆண்டாகத் தொண்டாற்ற இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இரங்கல் தீர்மானம்:

அ.தி.மு.க. பொதுக் குழுவில் எழுத்தாளர் சோ தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், நடிகை ஜோதிலட்சுமி, கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் எஸ்.ஆர். நாதன், ஆகியோர் மறைவுக்கும் 597 அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மொத் தம் 711 பேர் மறைவுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

CREATE NEW TOPIC



Information

ஜெயலலிதாவிற்கு 10, சசிகலாவிற்கு 2, எம்.ஜி.ஆருக்கு 1- அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள்

From  » தமிழ் தகவல் களஞ்சியம் » தினசரி செய்திகள்

Topic ID: 341

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...