சென்னை: பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஒப்புதலும் தெரிவித்தார். இதனையடுத்து, சசிகலாவிற்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக சம்மதத்தை பெறுவதற்காக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றது. பின்னர், சசிகலாவிடம் தீர்மான நகலை முதல்வர் ஒப்படைந்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தத் தகவல் பொதுக்குழுவிலும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சசிகலாவிற்கு தனது முதல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்த இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சசிகலாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.