விருத்தாச்சலம்: தமிழகத்தில் இன்று மேலும் ஒரு விவசாயி பயிரிழப்பு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இவரையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 35 விவசாயிகள் உயிரை நீத்துள்ளனர். தமிழக விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மிகப் பெரிய கொடுமையான ஆண்டாக மாறி விட்டது. வறட்சியாலும், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததாலும், மழை பொய்த்ததாலும் விவசாயிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.
கர்நாடக அரசு காவிரியில் போதிய தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் காவிரி டெல்டா பகுதி வறண்டு போய் விட்டது. வட கிழக்குப் பருவ மழையும் பொய்த்துப் போய் விட்டது. இடையில் வந்த புயலாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி அடுத்தடுத்த அடியால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையில் தற்போது விருத்தாச்சலத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். வி்ருத்தாச்சலம் அருகே உள்ளது மணவாள நல்லூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மான்துரை. இவர் தனது நிலத்தில் போட்டிருந்த பயிர்கள் போதிய நீர் இல்லாமல் கருகிப் போனதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
இவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 35 விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு இதுவரை வாயே திறக்காமல் உள்ளது. தமிழக அரசும் சரி, ஆளும் கட்சியும் சரி இதுவரை இதைப் பற்றிக் கவலையே படாமல், கருத்தே தெரிவிக்காமல் மெளனமாக உள்ளது.
இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1, நெல்லை மாவட்டத்தில் 1, திருவள்ளூர் மாவட்டத்தில் 1, ஈரோடு மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலமும் தற்போது இணைந்துள்ளது.
இதுவரை தற்கொலை செய்த எந்த ஒரு விவசாயியின் குடும்பத்தையும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்திக்கவில்லை. அவர்களுக்கு இழப்பீடோ அல்லது நிவாரணமோ அறிவிக்கவில்லை. ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமானதாகும்.