சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்துள்ளது அதிமுக பொதுக் குழு. இதற்கான ஒப்புதலை தெரிவித்துள்ள சசிகலா, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சசிகலாவிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்படைத்தார். அவருடன் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொறுப்பை ஏற்பார் என்று முதல்வர் தெரிவித்தார். இதனிடையே சென்னையில் ராயப்பேட்டை, பூவிருந்தவல்லி, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்ததை எதிர்த்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சசிகலா இன்னும் சில நாட்களில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது, மாவட்டம் தோறும் உள்ள அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களை சசிகலா நேரில் சந்திப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுப்பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தெரிகிறது.