சென்னை: முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தை மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அனுசரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு இன்று கூடியது. இதில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மறைந்த ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும், மகசேசே விருது வழங்க வேண்டும் மற்றும் அவரின் பிறந்த நாள் தேசிய விவசாயிகள் தினமாக அனுசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானத்தைக் கேள்விப்பட்ட பல விவசாயிகளுக்கு ஒரே ஷாக். ஏனென்றால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாகக் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வருவது கூட தெரியாமல் இந்தத் தீர்மானத்தை அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றியுள்ளது என்று கிண்டலடித்துக் கொண்டனர் விவசாயிகளும் விஷயம் தெரிந்தவர்களும்.
இந்தியாவின் பிரதமராக இருந்த சரண் சிங் விவசாயியாக வாழ்ந்தவர். விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடியத் தலைவர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஒரு தலைவருக்காக அனுசரிக்கப்படும் ஒரு தினத்தை எப்படி இன்னொரு தலைவருக்கு கொடுப்பார்கள் என்றெல்லாம் விவசாயிகள் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர், அமைச்சர்களாக இருந்த பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், இன்னும் தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இதர பொறுப்பாளர்கள் என நிறைந்த அவையில் இதுப் போன்ற அபத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.