சென்னை: அண்ணா காலத்து அரசியல்வாதி என்ற பெருமைக்குரிய 79 வயதாகும் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அரசியல் மேடை எதுவும் இதுவரை ஏறாத சசிகலா தலைமையை ஏற்றுள்ளார். அண்ணா காலத்தில் திமுகவுக்கு வந்தவர் பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன். 1967-ம் ஆண்டு திமுக முதலில் ஆட்சி அமைத்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அண்ணா ஆட்சி காலத்தில் திட்ட மதிப்பீட்டுக் குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1971-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் பண்ருட்டியார். பின்னர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
ஐநாவில்:
தமிழீழத் தமிழர் பிரச்சனையை ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகளுக்கு விளக்க எம்.ஜிஆரால் 1983-ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டவர் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன். 70 நாட்கள் ஐநா சபையில் ஈழத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் பிரச்சனையை சர்வதேச நாட்டு பிரதிநிதிகளுக்கு விளக்கியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஊர்வலமாக அழைத்து வந்த எம்ஜிஆர்
இதன்பின்னரே தமிழீழத் தமிழர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் முயற்சிக்கு பின்னர்தான் சர்வதேச நாடுகள் ஐநா சபையில் இலங்கையை அப்போது கண்டித்தது. பண்ருட்டி ராமச்சந்திரனை பாராட்டும் வகையில் சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
அமைச்சராக:
1977-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறையும் வரையில் அமைச்சராக பதவி வகித்தார் பண்ருட்டியார். 1987-ம் ஆண்டு ராஜீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தானபோதும் எம்ஜிஆரால் கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பண்ருட்டியார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமை ஏற்றார். பின் ஜெயலலிதாவில் தூக்கியடிக்கப்பட்ட போது நால்வர் அணியினரில் ஒருவராக பண்ருட்டியார் இருந்தார்..
பாமக, விஜயகாந்த்:
பின் பாமகவில் சேர்ந்து மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சிக்கு முதல் எம்.எல்.ஏ. சிறப்பை 1991-ல் பெற்று தந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது பாமகவின் சின்னம் யானை. அதனால் யானையில் ஊர்வலமாக சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் பாமகவில் இருந்து விலகி மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை நடத்த முடியாமல் புதியதாக கட்சி தொடங்கிய விஜயகாந்த் தலைமையை ஏற்றார்.
மீண்டும் ஜெ.விடம்:
அக்கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாகி சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் ஆனார். அங்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார். சட்டசபை தேர்தலில் ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
சசியையும் ஏற்றார்:
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவினர் சசிகலாவை சின்னம்மா என அழைத்த போது எதுவும் கருத்து சொல்லாமல் இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் சசிகலா தலைமையை ஏற்கும் முடிவுக்கு வந்து போயஸ் கார்டன் சென்று ஆலோசனைகளை கூறினார்.
சசிக்கு ஆதரவு:
இன்றைய பொதுக்குழுவில் எம்ஜிஆர் எனும் மாபெரும் மக்கள் தலைவர் உருவாக்கிய அதிமுகவுக்கு இதுவரை அரசியல் மேடை எதுவுமே ஏறாத சசிகலா எனும் சின்னம்மாவை தலைமை ஏற்க அழைக்கும் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றத்துக்கும் ஆதரவு தந்திருக்கிறார் அண்ணா காலத்து அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன்!
திசைமாறிய காலங்கள்!