நெல்லை: நெல்லையில் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை சேர்ப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை பொது விநியோக துறையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்டு கார்டு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவிகளில் உள்ள ஸ்கேனர் மூலம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் கடை ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் எண்களை இணைக்கும் போது பல்வேறு தவறுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
செல்போன்களை அடிப்படையாக வைத்து ரகசிய எண்ணை பெற்று ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. முதலில் குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் ஆதார் எண் மட்டுமே இணைக்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் ஒருவருக்கு வழங்கப்படும் பொருட்களின் விவரம் குறுஞ்செய்தியாக மற்றவர்களுக்கு செல்கிறது. தற்போது குடும்ப உறுப்பினர் அனைவரின ஆதார் எண்ணையும் இணைக்கும் பணி நடக்கிறது.
ஆதார் எண் இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். மேலும் செல்போன் இல்லாதவர்களும் என்ன செய்வது என தெரியாமல் விழித்து வருகின்றனர்.