NewMember•••1
Dharani
Dharani
31/12/2016, 4:13 pm
மும்பை: 2016ம் ஆண்டில் நடிகர் பர்ஹான் அக்தர், அர்பாஸ் கான் உள்ளிட்ட சிலர் தங்களின் மனைவியை பிரிந்துவிட்டனர்.

2016ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. பாலிவுட் இந்த ஆண்டு சில விவாகரத்து சம்பவங்களை பார்த்துள்ளது. நடிகர் பர்ஹான் அக்தர், நடிகர் அர்பாஸ் கான் உள்ளிட்டோர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த ஆண்டில் பாலிவுட்டை அதிர வைத்த பிரிவுகள் இது தான்,

பர்ஹான் அக்தர்:

பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்! Parhan10

நடிகர் பர்ஹான் அக்தரும் அவரது மனைவி அதுனா பபானியும் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிரிந்துள்ளனர். அவர்களுக்கு அகிரா, ஷகியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியவில்லை.

அர்பாஸ் கான்:

பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்! Arbas10

சல்மானின் கானின் தம்பி அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை மலாய்க்கா அரோரா கான். அவர்களுக்கு அர்ஹான்(14) என்ற மகன் உள்ளார். அர்பாஸ், மலாய்க்காவுக்கு 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது.

புல்கிட் சாம்ராட்:

பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்! Pulhit10

நடிகர் புல்கிட் சாம்ராட் தனது மனைவி ஸ்வேதா ரோஹிராவை பிரிந்தார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். சாம்ராட்டுக்கும் நடிகை யாமி கவுதமுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பே விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஹிமேஷ் ரேஷ்மய்யா:

பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்! Himesh10

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மய்யாவும், அவரது மனைவி கோமலும் திருமணமாகி இருபது ஆண்டுகள் கழித்து பிரிந்துள்ளனர். ஹிமேஷுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் இந்த பிரிவு என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

CREATE NEW TOPIC



Information

பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்!

From  » திரைக் கலைக்களஞ்சியம் » தமிழ் சினிமா களஞ்சியம்

Topic ID: 393

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TaCyclopedia

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...