சென்னை: ஒரு வழியாக எதிர்பார்த்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் மக்கள் மன்றத்தில், அரசியல் அரங்கில் அவர் வெற்றி பெற முடியுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. ஆட்சிக்கு வந்து 6 மாதங்களிலேயே ஜெயலலிதா மரணமடைந்துள்ளார். இன்னும் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி உள்ளது. எனவே பொன் முட்டையிடும் வாத்தை யாரும் அறுத்து பார்க்க விரும்ப மாட்டார்கள் என்ற விதிப்படி, அதிமுகவில் எந்த சலசலப்பும் ஏற்படாமல் புதிய பொதுச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டுக்கோப்பாக நாலரை ஆண்டு காலமும் பணிகளை 'பங்கிட்டுக்கொண்டு' வேலை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே இப்போது அவர்களுக்கு உள்ள அஜெண்டா.
எதிர்பார்த்தது:
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவது என்பது ஏற்கனவே பத்திரிகையாளர்களாலும், அரசியல் கட்சியினராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். இதற்கு காரணம், அதிமுகவினர் ஏற்கனவே சுமார் 20 வருட காலமாக சசிகலாவிடமும் வளைந்து பழகிவிட்டனர்.
பின்னணியில் சசி:
சீனியாரிட்டி, கட்சிக்கான உழைப்பு போன்ற கோஷங்கள் எல்லாம் சசிகலா எனும் நிதர்சனம் முன்பு ஆதர்ஷனம் இல்லாத வார்த்தைகள். ஜெயலலிதா என்ற பிம்பத்தை முன்னிருத்தி சசிகலாதான் கடந்த 20 வருடங்களாக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். போயஸ் இல்லம் செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும், கட்சியினரும், 'சின்னம்மாவிடம்தான்' பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர். பூங்கொத்து வாங்கி போஸ் கொடுப்பதோடு ஜெயலலிதா பணி நிறைவடைந்துவிடுவதுதான் வழக்கம்.
சின்னம்மா புதிது இல்லை:
சின்னம்மா என்ற வார்த்தையோ அந்த நபரோ அதிமுக மேலிட நிர்வாகிகளும், அமைச்சர்களுக்கும் புதிது கிடையாது. மக்களுக்குத்தான் அது கேட்டறியாத வார்த்தை. அதனால் பழகிக்கொள்ள பக்குவம் தேவை. பன்னீர்செல்வம், செங்கோட்டையனிடமோ, பண்ருட்டி ராமச்சந்திரன், பன்னீர்செல்வத்திடமோ பணிந்து போவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் எல்லோரும் பணிந்து பழக்கப்பட்ட நபர் சின்னம்மாதான். இது வெகுகாலமாக பழக்கி வைக்கப்பட்ட ஆட்டம்.
நிதி பலம் இருக்கே:
அதிமுக நிர்வாகிகள் ஒருசேர சசிகலாவை பொதுச்செயலாளர் என முன்னிருத்த இது ஒரு முக்கிய காரணம். இது தவிர, கட்சியின் பணம் உள்ளிட்ட நிர்வாகங்கள் சசிகலாவிடம்தான் உள்ளது. நீண்டகாலமாகவே அவர்தான் அதை நிர்வகித்து வருகிறார். பணமில்லாமல் தனித்து செயல்பட யாருக்குத்தான் தைரியம் வரும். எனவே சசிகலா போட்டியில்லாத ஒரே சாய்ஸ் ஆனதில் சந்தர்ப்பவாதம் ஏதும் இல்லை.
சசிகலாவுக்கு சவால்:
இதுவரை சசிகலா தாண்டியுள்ளது பாதி கிணறைத்தான். இனிமேல்தான் கஷ்டமான காலம் அவரை எதிர் நோக்கியுள்ளது. அதுதான் மக்கள் மன்றம். ஏன் என்று கேட்டு பழகாத அதிமுகவினரிடம் சசிகலா காலப்போக்கில் பழக்கப்பட்டு போய்விடுவார். பழக்கப்படுத்தப்படுவார். ஆனால், பாக்கியுள்ள பல கோடி பொதுமக்களை அவர் எப்படி ஈர்க்க முடியும் என்பதே பெரும் சவால்.
சசிகலா குரலை கூட கேட்டறியாத பொதுமக்கள் எந்த நம்பிக்கையில் அதிமுகவுக்கு வாக்களிப்பர்? ஜெயலலிதா முதல்வராகும் முன்பே பொதுக் கூட்டங்களில் மாபெரும் மக்கள் கூட்டத்தை தன் பக்கம் ஈர்க்க வைக்கும் மேடை பேச்சு கலையை கற்று வைத்திருந்தார். அவரது சினிமா பிரபல்யமும் மக்களை அலை அலையாக கூட்டி வந்தது. எனவேதான் எம்ஜிஆரால் ஜெயலலிதாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்க முடியவில்லை.
சர்ச்சைகளுடன் சசிகலா:
சசிகலாவுக்கு அப்படி எந்த பின்புலமும் இல்லை. தேசிய அளவில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஜாதி பாசமும் கிடைக்காது. சொத்துக்குவிப்பு வழக்கு, ஜெயலலிதா சிகிச்சையில் பராமரிக்கப்பட்ட ரகசியம், ஜாஸ் சினிமாஸ் என எவ்வளவோ சர்ச்சைகளுடனும், ஜெயலலிதாவால் ஏற்கனவே சில முறை கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்ற நெகட்டிவ் முத்திரையுடனும்தான் மக்கள் மன்றத்திற்கு வரப்போகிறார்.
மக்கள் கையில் தீர்ப்பு:
பணத்தால் மட்டுமே தேர்தல் வெற்றியை பெற்றுவிட முடியும் என்று சசிகலாவும் நம்ப மாட்டார். எனவே மக்களின் நன்மதிப்பை பெற எவ்வளவோ முயற்சிகளை அவர் எடுத்தாக வேண்டும். அவரது முயற்சிகளை மக்கள் ஏற்பார்களா, ஏற்கமாட்டார்களா, குடும்பத்தாரின் ஆதிக்கம் கட்சியில் ஓங்கி புதிதாக மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்துமா என்பதெல்லாம்தான் இனி அதிமுக எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.