சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரியுள்ளார்.
இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் முழுவிவரத்தையும் தமிழக அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா உடல் நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிடாதது ஏன்? அரசு தனது கடமைப் பொறுப்பை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டது. அரசு அறிக்கை வெளியிட்டதால் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மரணத்தில் சந்தேகம் எழவில்லை என்று முத்தரசன் கூறியுள்ளார். முன்னதாக, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.