லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் அகிலேஷ் யாதவும் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவ்பால் சிங்கும் இடையேயான கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மாநில முதல்வரும், முலாயமின் மகனுமான அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அகிலேஷால் தீவிரமாக எதிர்க்கப்பட்ட சிலர், வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டனர். முக்கியமாக அண்மையில் கட்சியில் இணைந்த குவாமி ஏக்தா தளத்தின் எம்எல்ஏ சிக்பாதுல்லா அன்சாரிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது அகிலேஷ் கூறியிருந்தார்.
அவரது சகோதரர்கள் கொலைப் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பதால், தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு அது பின்னடைவைத் தரும் என அகிலேஷ் கூறினார். ஆனால், அதையும் மீறி முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட பட்டியலில் அன்சாரியின் பெயர் இடம் பெற்றது. அதேவேளையில், அகிலேஷ் ஆதரவு அமைச்சர்களான ராம் கோவிந்த் செளத்ரி, பவன் பாண்டே, அரவிந்த் சிங் கோப் ஆகியோரின் பெயர்கள் முலாயம் சிங்கின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அகிலேஷ், வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்து உடனடியாக லக்னோவுக்கு திரும்பி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தனிப்பட்டியல் வெளியிட்ட அகிலேஷ்
இதையடுத்து புதிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தனியாக வெளியிட்டுள்ளார். இதில் 235 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முலாயம் சிங் வெளிட்ட பட்டியலில் இடம்பெறாத தற்போதைய எம்எல்ஏ-க்கள் பலரது பெயர்கள் அகிலேஷ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சி தலைமைகளுக்கு இடையே வலுத்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.