திருச்சி: திருச்சியில் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் படும் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் எலிக்கறியை தின்று போராட்டம் நடத்தினர். விவசாயிகள் எலிக்கறியை தின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.