சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி. இவரது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது ரூ147 கோடி ரொக்கம், 130 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. இதில் ரூ34 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்.
இச்சோதனை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சேகர் ரெட்டி தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர். இவருக்கு போயஸ் கார்டன் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் நெருக்கம். இவர்களது பணம் தான் இவை என கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து அமலாக்கப் பிரிவு, சிபிஐ ஆகியவை சேகர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, நண்பர் பிரேம், தொழில் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருந்த தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இதனிடையே சேகர் ரெட்டி உட்பட 5 பேர் மீது ஜாமீன் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விஜயலட்சுமி விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணையின் முடிவில் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி விஜயலட்சுமி தள்ளுபடி செய்தார். அதேபோல் சேகர் ரெட்டி உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐ மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.