சென்னை: பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்த சசிகலா நாளை முறைப்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதால் அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில உள்ள ஸ்ரீவாரு வெங்டாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் ஒப்புதல் அளித்தார். மேலும், டிசம்பர் 31ம் தேதியான நாளை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இது என்பதால் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்பது மட்டுமல்லாமல் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில், எம்எல்ஏக்களின் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சசிகலா முதல்வராவது குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.