சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு திடீரென ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்து மறைக்க வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோசப் ஸ்டான்லி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் எந்த வித போட்டோ, வீடியோ ஆதாரமும் வெளியாகவில்லை, எனவேதான் எனக்கும் சந்தேகம் எழுகிறது என்றார். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 9-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கில் எதிர் மனுதாரர்களான பிரதமர் அலுவலகம், நாடாளுமனற விவகாரத் துறை அமைச்சகம், மத்திய உள்துறை செயலாளர், மத்திய சட்டம் அமைச்சகம், சி.பி.ஐ. இயக்குனர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு திடீரென ஏற்பட்டது. அவரது உடல்நிலைக் குறித்து மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பல்வேறு தேசிய தலைவர்கள் வந்து சந்தித்து சென்றுள்ளனர். அப்போது தலைவர்கள் வந்து நலம் விசாரித்து சென்றது எல்லாம் பொய்யா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொண்டர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.