சென்னை: ஒண்ட வந்த பிடாரியும், ஊர்ப் பிடாரிகளும் என்ற தலைப்பில் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
அந்தப் பதிவு இதோ...
ஒரே ஒரு நாட்டில் ஓராயிரம் பிடாரிகள் உருப்படாமல் வாழ்ந்து வந்தார்கள். இந்த குழப்பமானச் சூழலைப் பார்த்து ஊரிலே ஒண்டுவதற்கு ஒரு வைதீகப் பிடாரி வந்து நின்றது.
ஊர்ப் பிடாரிகளின் ஒரு பிரிவில் ஓர் ஊமைப் பிடாரி கமுக்கமாக இருந்து ஆட்சி கட்டிலில் ஏறி அமர்கிறது. இப்போதைய முதல் பிடாரி இரண்டாம் இடமேப் போதும் என்று இறங்கி வருகிறது. பழைய வழக்கு ஒன்றின் தீர்ப்பு வந்து ஊமைப் பிடாரி உள்ளே போகும்போது, முதலிடம் மீண்டும் முறையாக வந்து சேரும் என்று மூளையைக் கசக்கி முடிவெடுக்கிறது.
ஒண்ட வந்த பிடாரி ஒன்றாம் பிடாரிக்கு தலையையும், ஊமைப் பிடாரிக்கு வாலையும் மாற்றி மாற்றிக் காட்டி மர்ம நடனம் ஆடுகிறது. ஊர்ப்பிடாரிகளின் இன்னொரு பிரிவை ஜெயிலைக் காட்டி, பெயிலைக் காட்டி தன் பிடிக்குள் வைக்கிறது. உதிரிப் பிடாரிகளை சாதிவாரியாகப் பிரித்து சதிராட்டம் போடுகிறது. இப்படி ஊர்ப் பிடாரிகளை ஒவ்வொன்றாய் பிரித்தாண்டு உள்ளே நுழையப் பார்க்கிறது.
உருட்டியும், மிரட்டியும், தாங்கியும், தடவியும் என்னென்னவோ செய்கிறது ஒண்ட வந்த பிடாரி. அதன் கொடூர முகத்தையும், கோரப் பற்களையும் பார்க்கத் தவறுகின்றன பல ஊர்ப் பிடாரிகள். ஒண்ட வந்த பிடாரி உள்ளே நுழைந்ததா? ஊர்ப் பிடாரிகளுக்கு என்ன நேர்ந்தது? வெள்ளித் திரையில் காண்க!
இதுதான் உதயகுமாரன் போட்டுள்ள பதிவு: