சென்னை: மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு விநியோகஸ்தர் உரிமை வழங்குவதாக கூறி ரூ.11 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந் நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும் புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.
அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும், 'சூப்பர் குட்ஸ்' படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். இதனிடையே பணமோசடி வழக்கில் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி உள்பட திரையுலக பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் அளித்தனர். இந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு விநியோகஸ்தர் உரிமை வழங்குவதாக கூறி ரூ.11 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சிவபாலன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மதன் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.