டெல்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பின்னர் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருந்தது. அந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. மேலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. மேலும், அந்த திருத்தத்தில் ''மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் குறைந்த பட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.
திருத்தப்பட்ட அவசர சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.