லக்னோ: சமாஜ்வாடி கட்சியை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் குதித்தார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், அகிலேஷ் விலகாவிட்டால் அவருக்குப் பதில் புதிய முதல்வரை முலாயம் சிங்கே அதிரடியாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. முலாயம் சிங் யாதவ் தான் ஏற்கனவே அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் கூட்டத்தை நாளை லக்னோவில் கூட்டியுள்ளார். அப்போது அவர்களிடம் கட்சியின் வெற்றிக்காக உறுதிபட பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
முன்னதாக அகிலேஷ்யாதவை நீக்கியது குறித்து முலாயம் சிங் யாதவ் கூறுகையில், நான்தான் அவரை முதல்வராக்கினேன். ஆனால் என்னிடம் கூட ஆலோசனை கேட்காமல் அவர் செயல்படுகிறார். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார் கோபமாக. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு முலாயம் பதிலளிக்கையில் இப்போது முடிவு செய்யவில்லை. அதேசமயம், யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதையும் நானே முடிவு செய்வேன் என்று ஆணித்தரமாக கூறினார் முலாயம் சிங்.
முலாயம் சிங் யாதவ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த 187 பேரின் பெயர்கள் அகிலேஷ் யாதவ் தரப்பு அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த 187 பேரும் யாருடன் அணி சேரப் போகிறார்கள் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது.
மொத்தத்தில் நாளைய முலாயம் சிங் யாதவின் கூட்டத்தில் மேலும் பரபரப்புகள் அரங்கேறலாம் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.