கோவை: 50 நாட்களுக்கு மேலாகியும் ரூபாய் நோட்டு பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்து அவருக்குத் தூக்குக் கயிறு அனுப்ப முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் சீராகும் என்றும் இல்லையெனில் தன்னை தூக்கில் போடுங்கள் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆனால் ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. இதனால் எழுந்துள்ள பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணத்தை எடுக்க மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் ஏடிஎம்கள் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் பொது மக்கள் தங்கள் அன்றாட செலவுகளை பெருமளவு குறைத்துகொண்டுள்ளனர். திருமணம் போன்ற விஷச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, பணத்தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடிக்குக் தூக்கு கயிறு அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தூக்குக் கயிறுடன் திரண்டு வந்த அந்த அமைப்பினர், பிரதமர் மோடிக்குக் தூக்குக் கயிறை அனுப்ப முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.