டெல்லி: உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்து பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக இந்தியா இருப்பதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. 2 மற்றும் 3வது இடங்களில் சீனா, ஜப்பான் நாடுகளும் 4 இடத்தில் ஜெர்மனி உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருவது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகிய காரணங்களால் இந்தியா ஐந்தா வது இடத்துக்கு வந்துள்ளதாகவும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்தியா இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், அதே நேரம் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 சதவீதத்தில் இருந்து 1.1. சதவீதமாக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது. சிஇபிஆர் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், வரும் 2020ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சூழ்நிலைகள் சாதகமாக அமையும் பட்சத்தில் முன்னதாக கூட நடக்க வாய்ப்பு இருக்கிறது என கடந்த 2011-ம் ஆண்டே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டுக்குள் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என கடந்த அக்டோபர் மாதத்தில் சர்வதேச செலாவணி மையமும் கணித்திருந்தது. 2020ம் ஆண்டு இந்தியா ஐந்தாவது இடத்துக்கு வரும் என முன்னதாக போர்ப்ஸ் கணித்திருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் பவுண்ட் மதிப்பு 20 சதவீதம் சரிந்ததை அடுத்து இப்போதே நடந்துவிட்டதாக போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் பொருளாதாரத்துக்கு இடையே யான வித்தியாசம் தொடர்ந்து அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சி இருக்கும். ஆனால் இங்கிலாந்து பொருளாதாரம் 1 முதல் 2 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
2016ம் ஆண்டின் இங்கிலாந்து பொருளாதாரத்தின் மதிப்பு 1.87 லட்சம் பவுண்ட். இதனை டாலராக மாற்றும் பட்சத்தில் இங்கிலாந்து பொருளாதாரத்தின் மதிப்பு 2.29 லட்சம் கோடி டாலர். அதே சமயம் இந்தியா பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.153 லட்சம் கோடி. இதனை டாலராக மாற்றினால் 2.30 லட்சம் கோடி டாலர். சிறிய இடைவெளியில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளது. இங்கிலாந்து பவுண்ட் கடுமையாக சரிந்தது, ரூபாயின் மதிப்பில் ஓரளவு நிலைத்தன்மை இருந்ததுமே காரணமாகும். 2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாக வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல் கலாம் விருப்பப்பட்டார். அவர் மறைந்த ஓர் ஆண்டிற்குள்ளேயே முதல்படியாக இந்தியா பொருளாதார வல்லரசாக 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.