சேலம்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரை சேர்ந்தவர் காயத்ரி(35). சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆள் கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். கடத்தல் கும்பல் தலைவியான அவர் மீது பல வழக்குகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் கூட சேலத்தில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.20 லட்சம் பணம் பறிக்கப்பட்ட வழக்கில் காயத்ரி தேடப்பட்டார். சிலரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காயத்ரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய காயத்ரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என எஸ்.பி. ராஜன் மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று காயத்ரியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் அனுமதி அளித்தார். இதையடுத்து காயத்ரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது இது முதல் முறை ஆகும்.