சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும பெருமை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு வழங்குவதற்கான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தந்தி தொலைக்காட்சியில் அதன் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். அப்போது அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான கேள்விகளை கேட்டார்.
அவற்றில் ஒன்றான, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் நபருக்குதான் நோபல் பரிசு வழங்கப்படும் என தெரியாதா என பாண்டே கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது நோபல் பரிசுக்கே கிடைக்கும் பெருமை என்று அவர் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் நோபல் பரிசு வழங்குவதற்கான சட்ட திட்டங்களை, பரிசு வழங்கும் நாடுகள் மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோன்று தேசிய விவசாயிகள் நாள் குறித்தும் நெறியாளர் பாண்டே கேள்வி எழுப்பினார். அதற்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மழுப்பலாக பதில் அளித்தார்.