டெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் ஒத்திகை நடத்தியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆந்திரா, ஒடிஷா எல்லையில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் இருக்கும் ராம்குர்ஹா காட்டுப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி 7 பெண்கள் உள்பட 30 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
அதற்கு பழி வாங்கும் விதமாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான ஆந்திர பவனில் மக்களோடு மக்களாக ஊடுருவியுள்ளனர். அவரை கொலை செய்ய 6 முறை ஒத்திகையும் செய்துள்ளதை மத்திய உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறை ஆந்திர போலீசாரை எச்சரித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு ஆந்திர பவனுக்கு வந்தபோது பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து மாவோயிஸ்டுகளும் மைக் பிடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலுக்கு சென்றபோது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிருக்கு மாவோயிஸ்டுகளால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.