சென்னை : பணத்தட்டுப்பாட்டைக் கண்டித்து சென்னை பள்ளிக்கரணையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் நேற்று தடியடி நடத்தியதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என அறிவித்தார். அன்று முதல் நாட்டில் பெரும் பணப்பஞ்சம் நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து சென்னை பள்ளிக்கரணையில் ஜனநாய வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற காவல்துறையின் வாகனங்கள் மீது அவர்கள் கற்களை வீசித்தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் செயலாளர் ஜிராமகிருஷ்ணன், போலீசாரின் தாக்குதலுக்க கண்டனம் தெரிவித்தார்.
அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். போலீசாரின் தாக்குதலில் பலரின் மண்டை உடைந்ததாக கூறிய அவர், சிறையில் உள்ள 14 பேரை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போலீஸார் தாக்கிதில் ஒருவரது மண்டை ஓடே தெரியும் அளவுக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு 16 தையல் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மயக்கம் அடைந்தவர்களை தண்ணீர் ஊற்றி தெளிய வைத்து வைத்து அடித்ததாகவும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மேலும் தீக்கதிர் செய்தியாளரை தாக்கி அவரது கேமிராவை போலீஸார்சார் பறித்துக்கொண்டதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். பணத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நாடு முழுவதும் பணப்பிரச்சனை இன்னும் தீரவில்லை என தெரிவித்தார்.